மட்டக்களப்பு நகரத்திலிருந்து மேற்கே சுமார் 5கி.மீ தொலைவில் கொக்குவில் எனும் கிராமத்திலுள்ள புறநகர் பாடசாலையாகும். இங்கு இரு கோயில்களும் ஒரு முன்பள்ளியும்; அமையப்பெற்றுள்ளன.

மட்டக்களப்பின் புறகர் பகுதியில் முழுமையாக சமுர்த்தி நிவாரணம் பெறும் பெற்றாரது பிள்ளைகள் கல்விகற்கும் பாடசாலையாக மட்/மட்/கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் விளங்குகிறது. இப் பிரதேச வாழ் மக்கள் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலமையோடு, பெற்றாரின் கல்வியறிவு வீதம் மிக மிக பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. பெரும்பாலான மாணவர்கள் பெற்றாரின்றி உறவுகளோடு வாழ்கிறார்கள். பௌதீக வள ரீதியில் பல்வேறு தேவைப்பாடுகள் நிறைவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் பெற்றாரின் சிறந்த ஒத்துழைப்பு, பங்குபற்றல் காரணமாக சிறப்பான வளர்ச்சிப்பாதையில் செல்வது வெளிப்படை உண்மையாகும்.
இப் பாடசாலையானது, 1960 ஆம் ஆண்டு திரு.கந்தையா என்பவரால் தேற்றா மர நிழலில் ஓலைக்கொட்டகையொன்றில் 24 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு இது 1962 ஆம் ஆண்டு அரச பாடசாலையாக மாற்றம் பெற்றது. தொடர்ந்து 1980 இல் 80 ஒ 20 இல் ஓர் நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு அதனுள் இயங்கத்தொடங்கியது. வகை III பாடசாலையான இது 1983 இல் தரம் 6 ஆரம்பிக்கப்பட்டு வகை II பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அதிபர் திரு க. பகிரதன் அவர்களின் அயராத முயற்சியினால் பின் 2018 இல் தரம் 10, 11 ற்கு அனுமதி கிடைக்கப்பெற்று 2019இல் முதல் தடவையாக க.பொ.த(சா.த) பரீட்சைக்கு தோற்றி அனைத்து மாணவர்களும் சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு சென்றுள்ளனர். தரம் 5 பலமைப்பரிசில் பரீட்சையில் துரித விருத்திப் போக்கோடு, Internal School Award டெங்கற்ற பாடசாலை, உற்பத்திதிறன் போட்டி என்பவற்றில் தேசிய விருதுகளையும் பெற்றதோடு ஆளணி வளத்தில் அதிபரோடு 20 கல்விசார் ஊழியர்களையும் இரு கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு புதிய பாதையில் இலக்கை நோக்கி துரிதமாக வெற்றி நடைபோடுகின்றது





