அதிபர் செய்தி
திரு. லோ. விஜேந்திரன்
தமிழர்களை தலைநிமிரச் செய்யும் அடையாளமாகத் திகழும் கொக்குவில் பாடசாலையின் இணையத்தளமானது புதுப்பொலிவுடன் மெருகூட்டப்பட்டுள்ளது. எதிர்கால சமூகத்திற்கான தலைவர்களையும், முன்னோடிகளையும் உருவாக்கிடுவதில் பெரும்பங்காற்றும் எமது பாடசாலையின் திறன்மிகு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட கல்வி சாராத சாதனைகளினையும், அவர்கள் பற்றிய விபரங்களையும் உத்தியோகபுர்வமாக அனைவரும் பெற்றிடுவதற்கு எமது இந்த இணையத்தளம் வழிசெய்யும். கல்லூரி பற்றிய உத்தியோகப்பற்றற்ற செய்திகளினை புறக்கணிக்கவும், தேவையற்ற செய்திகளினால் குழப்பம் அடைவதினை தவிர்க்கவும் கூட இந்த பாடசாலையின் இணையப்பக்கம் உதவிடும்.
பாடசாலை பற்றிய செய்திகளினை ஒளிவுமறைவுகளின்றி வெளிப்படுத்தவும் பாடசாலையினது வளர்ச்சித்திட்டங்கள் பற்றிய செய்திகள் மற்றும் அவற்றினை முன்கொண்டு செல்வதற்கு ஏற்படக்கூடிய தேவைகள் மற்றும் அவற்றிற்கு பங்களிப்புச் செய்தோர் பற்றிய விபரங்களினையும் ஒருங்குசேர பெற்றுக் கொள்ள ஏதுவான வழிவகைகளினை இந்த இணையத்தளத்தின் வாயிலாக மேற்கொண்டுள்ளோம். கல்லூரியினது வளர்ச்சியில் நன்றியுணர்வு கொண்டு உலகமெங்கும் வேரூன்றி மட்/கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் அன்னையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கொக்குவில் வாழ் மைந்தர்கள் அனைவரும் இந்த இணையத்தளத்தின் ஊடாக ஒன்றிணைவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
திரு. லோ. விஜேந்திரன்
அதிபர்
கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்.





