பாடசாலை கீதம்

விக்னேஸ்வரா வித்தியாலயம் வாழ்கவே விரைந்து தூய அறிவு தேடும் மாணவர் வாழ்கவே வீர சக்தி காளியம்மன் அருளும் ஓங்கவே வேம்பு சூழ்ந்த கொக்குவில்கிராமம் வாழ்கவே

தாய் தந்தை குரவர் சொல்லை வேதவாக்காய் கொண்டு வாழ்வோம் கற்றிடவோம் வெற்றி பெற்றிடுவோம் ஒழுக்கம் பேணி உயர்ந்திடுவோம் விக்னேஸ்வரா ....................

அமுதமான தமிழோடு அறிவியல் கற்போம் அழகு கொஞ்சும் கலைகளோடுகற்போம் சமயமோடு ஆங்கிலமும் கணிதமும் வரலாறும் ஆற்றலோடு கற்று நல்ல அறிஞர்களாவோம் விக்னேஸ்வரா.......................

இரவு பகல் முயன்று நாங்கள் கல்வி பயிலுவோம் இனிமையுடன் கல்விகற்று சிறந்த விளங்குவோம் அனுதினமும் உன்னை பணிவோம் வாழ்க வாழ்கவே அறிவொளி வீசி தினம் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே!