பரிசளிப்பு விழா

bu1.jpg
bu1.jpg

பிரதி அதிபர் செய்தி

திரு த. சந்தரராஜ்

கொக்குவில் விக்னேஸ்வராவித்தியாலயத்தில் மடியிலே தவழும் குழந்தைகள் தரணியெங்கும் புகழ் பரப்பும் கல்விமான்களாக உயர்வு பெற்று கொக்குவில் அன்னைக்கு மகுடம் சூட்டி வரும் இத்தருணத்திலே தாயகத்தில் வாழும் புத்திஜீவிகளையும். புலம்பெயர்ந்து வாழும் புலமையாளர்களையும் ஒன்று சேர்க்கும் பாலமாக பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முகிழ்ந்து மணம் பரப்ப ஆரம்பித்துள்ளது. இந்தப் பொன்னான சந்தர்ப்பம் வரலாற்றில் சிறப்பு முத்திரை பதிக்கப்பட்டு போற்றப்படும் என்பது என் எண்ணமாகும்.

கடமைகளும் பொறுப்புக்களும்

  • அதிபர் இல்லாத போது அதிபருக்குரிய பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் ஏற்றுச் செயற்படல்.
  • கல்லூரியின் முகாமைத்துவத்திலும், நிருவாகத்திலும் அதிபருக்குத் தேவையான ஒத்தழைப்பினை வழங்குதல்.
  • மாணவர் அனுமதி தொடர்பான சுற்றுநிருபங்களுக்கமைவாக செயற்படல்.
  • பாடசாலை விடுகைப் பத்திரங்கள், நற்சான்றிதழ்ப் பத்திரங்கள், பரீட்சைப்பெறுபேறுகள் என்பவற்றை வழங்குதல்.
  • கடிதத் தொடர்புகள்.
  • கல்லூரியின் ஆவணங்களையும், கோவைகளையும் பேணுதலும் அவற்றிற்குப் பொறுப்பாக இருத்தல்.
  • காகிதாதிகளின் பொறுப்பு.
  • கல்லூரியின் தரவுகள், புள்ளி விபரங்கள் என்பவற்றைத் தயாரித்தலும் வழங்குதலும்.
  • வருடாந்த கணக்கெடுப்பு (ARR)
  • ஆசிரியர் தேவை, கல்லூரியின் பௌதீகத் தேவைகள் (கட்டிடம், தளபாடம் முதலியன) என்பவற்றைக் கணித்தல்.
  • வகுப்பறைக் கற்பித்தல் மேற்பார்வை செய்தல்.
  • ஆசிரியர், ஊழியர் சம்பளம் கடமைப்பட்டியல் கண்காணித்தல்.
  • இலவசச் சீருடை விநியோகம்.
  • கல்லூரியின் பொது ஒழுங்குகளையும் கண்காணித்தல்.
  • வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியும் சிறுவர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல்.
  • பிரிவுத் தலைவர்களினதும் இணைப்பாளர்களினதும் நிருவாகம் சார்ந்த வேலைகளை இயைவுபடுத்தல்.
  • தர உள்ளீடு கணக்குகள் அறிக்கைகள் நிதி உதவியாளருக்கு நெறிப்படுத்தல்.
  • ஆசிரியர், ஊழியர் லீவு தொடர்பான கோவைகள் மேற்பார்வை.
  • சகல கணக்குகளும் உரிய முறையில் பேணுதல் பரிசீலித்தல்.
  • மாணவ தலைவர் குழுக்களை கண்காணித்தல்.
  • கல்லூரி தொடர்பான தரவுகள் பெறல் பேணல் இற்றைப்படுத்தல்.

திரு த. சந்தரராஜ்
பிரதி அதிபர்
கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்.